மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-20 20:01 GMT
நெல்லை:
மேலப்பாளையம் சந்தை முக்கில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநகர செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். தென்மண்டல அமைப்பு செயலாளர் ரசூல்மைதீன் முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் பாளை.ரபீக் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்க போவதில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுபடி ஆடை அணிவது அடிப்படை உரிமை. எனவே அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்