விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கொட்டவாடி மயான தகன மேடையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-20 19:58 GMT
பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கொட்டவாடி மயான தகன மேடையில் பெரியசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆச்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்