டிராக்டர் கலப்பையில் மோதி 1½ வயது குழந்தை சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் கலப்பையில் மோதி 1½ வயது குழந்தை இறந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 30). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் தனது குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடைய 1½ வயது குழந்தை நிஷாந்த். குழந்தை நிஷாந்த் கரும்பு ேதாட்டத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பை மீது எதிர்பாராதவிதமாக குழந்தை நிஷாந்த் மோதினான்.. இதில் படுகாயம் அடைந்ததால் குழந்தையை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென டிராக்டர் கலப்பையில் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.