ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அச்சன்புதூரில் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அச்சன்புதூர்:
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு வரக்கூடாது எனும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து நேற்று மாலை அச்சன்புதூர் முகமதியர் திடலில் அவுலியா மீராசா பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் தலைவர் மீராகனி தலைமை தாங்கினார். பொருளாளர் சேகு மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் மைதீன் பிச்சை, நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நாகூர்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முகமது மீரான், எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் முத்து அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யாக்கூப், வடகரை தீனா.ப பள்ளி இமாம் சாகுல்ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்துகொண்டனர். ஜாவித் நசீம் நன்றி கூறினார்.