பழங்கால செங்கற்கள், ஓடுகள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணியில் பழங்கால செங்கற்கள், ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் உச்சிமேடு என்ற பகுதியில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அகழ்வாராய்ச்சி பணி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் 5 மீட்டர் அகலம் கொண்ட 12 குழிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 16 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2 குழிகளில் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியுள்ளது. இந்த பணியின்போது ஏராளமான பானை ஓடுகள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், மேலும் அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த தகவலை தொல்லியல்துறை துணை இயக்குனர் பொன் பாஸ்கரன் தொிவித்தார்.