முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.;
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.