போலீஸ் ஏட்டுக்கு அடி, உதை

ஓமலூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி- உதை விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-20 19:11 GMT
ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் முன்பு 3 பேர் மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற ஓமலூர் போலீஸ் நிலைய ஏட்டு செல்வம் தட்டிக்கேட்டார். அப்போது அந்த 3 பேரும் ஏட்டு செல்வத்தை அடித்து, உதைத்தனர். இதில் காயமடைந்த செல்வம் இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏட்டுவை தாக்கியதாக காமலாபுரம் ஏர்போர்ட் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 28), குபேந்திரன் (25), சின்னத்துரை ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்