ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்கு
குளித்தலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
குளித்தலை,
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து குளித்தலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 22 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.