மாணவ-மாணவிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு
ரிஷியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு நடந்தது.
நீடாமங்கலம்:
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள், நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இயற்கை விவசாயி செந்தில் உமையரசி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உணவு பிரமிடு படம் வரைந்து அதன் மூலம் சரியான விகித அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறினர். ஊட்டச்சத்து குறைபாட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் மற்றும் அதற்கான தீர்வுகளை கண்காட்சி மூலமாக விளக்கினர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ரிஷியூர் கிராம விவசாயிகளுக்கு உரமேலாண்மை குறித்த ஆலோசனையும், செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.