வெவ்வேறு இடங்களில் தீ விபத்து; மரங்கள் எரிந்து நாசம்

வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.;

Update:2022-03-21 00:34 IST
நொய்யல், 
கரூர் மாவட்டம் பூலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 50), விவசாயி. இவரது தோட்டத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. மேலும், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இந்தநிலையில் வெயிலின் காரணமாக காய்ந்திருந்த செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அங்கிருந்த மரங்களிலும் தீப்பற்றியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதேபோல் வெண்ணைமலை சேரன் நகரை சேர்ந்த அருண் ராஜா (45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த மரங்கள் மற்றும் செடி, கொடிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், அருகிலுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்