நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
கோமல் ஊராட்சியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி கடைவீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை விரட்டி செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.