தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை கொக்கிரகுளம் அடியார்க்கு நால்வர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). வெல்டிங் தொழிலாளி. இவர் தற்போது பாளையங்கோட்டை பரதர் தெருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.