வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-20 18:45 GMT
கரூர், 
நகை, பணம் திருட்டு
கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட திருமலை நகர் 2-வது ெதரு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 43). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து, அவருக்கு திதி கொடுப்பதற்காக பரமேஸ்வரி தனது குடும்பத்துடன் ராமேசுவரம் சென்று விட்டார்.இந்தநிலையில் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. 
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்