தாந்தோன்றிமலை மாரியம்மன் கோவில் திருவிழா-27-ந்தேதி தொடங்குகிறது

தாந்தோன்றிமலை மாரியம்மன் கோவில் திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2022-03-20 18:36 GMT
கரூர், 
மாரியம்மன் கோவில்
கரூர் தாந்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை அமராவதி ஆற்றிலிருந்து மாரியம்மனுக்கு கம்பம் பாலித்து வந்து கம்பம் நடும் விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், யானை வாகனம், வேப்பமர வாகனம், புலி வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது.
பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
ஏப்ரல் மாதம் 1-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், 3-ந்தேதி பகவதியம்மனுக்கு அமராவதி ஆற்றிலிருந்து கரகம் கொண்டு வருதலும், 4-ந்தேதி மாரியம்மன் திருத்தேரும், பகவதியம்மனுக்கு சந்தனக்காப்பும், 5-ந்தேதி மாரியம்மன், பகவதியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
7-ந்தேதி மாலை 5 மணிக்கு மாரியம்மன் கம்பம், பகவதியம்மன் கரகம் அமராவதி ஆற்றில் கொண்டு விடுதல் நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்