வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.;

Update:2022-03-20 23:38 IST
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு கோவிலில் கங்கைக்கு பாவ விமோசம் கொடுக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கல்யாணசுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வந்து மணிகர்ணிகை தீர்த்த குளம் அருகில் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளி கங்கைக்கு பாவ விமோசனம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் அஸ்ரதேவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு மணிகர்ணிகை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர்  சப்த கன்னி, காலபைரவர் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மேலும் செய்திகள்