தொழிலாளிக்கு கொலை மிரட்டல்;
அஞ்சுகிராமம் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்;
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடியைச் சேர்ந்தவர் டேவிட் (வயது60), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜீத் (25) என்ற வாலிபருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் அஞ்சுகிராமம் போலீசில் அஜித் மீது புகார் செய்துள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித் சம்பவத்தன்று மயிலாடி வைத்து டேவிட்டை வழிமறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா வழக்குப்பதிவு செய்து வாலிபர் அஜித்தை கைது செய்தார்.