மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.;

Update: 2022-03-20 17:47 GMT
சிங்கம்புணரி, 
 சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம் பட்டியில் அமைந்துள்ள கண்ணமங்கல பட்டியில்  பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 8 ைமல் தூரம் பெரிய மாடு வண்டிக்கும் 6 மைல் தூரம் சின்ன மாடு வண்டிக்கும் சென்று திரும்ப பயண தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 8 வண்டிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசை வள்ளால பட்டியை சேர்ந்த இளந்தேவர், மேலூர் டைம்பாஸ் விராமதி சந்திரன் இரண்டாம் பரிசு, சிங்கம்புணரி பழனிச்சாமி நாடார் வண்டி 3-ம் பரிசும் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி வைரவன் 4-ம் பரிசு பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாடு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் நரசிங்கம்பட்டி மலையாண்டி வண்டி முதல் பரிசும் பட்டிவீரன்பட்டி முரளி 2-ம் பரிசும், கள்ளந்திரி சர்வேஷ் மூன்றாம் பரிசும், சிங்கம்புணரி சேவுகமூர்த்தி வைரவன் 4-வது பரிசும் பெற்றனர். ஏற்பாடுகளை  கண்ணமங்கலம் கிராமத்தார்கள் மற்றும் தேவர் திருமகனார் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்