வாகன சோதனையில் 340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது
ஆரல்வாய்மொழியில் வாகன சோதனையில் 340 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் வாகன சோதனையில் 340 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகன சோதனை
ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், விஜயகுமார் தலைமையிலான போலீசார் முப்பந்தல் அருகே கண்ணுப்பொத்தை ரயில்வே கிராசிங் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரில் ஒருவர் கொண்டு வந்த மூடைகளை தள்ளி விட்டு தப்பியோடி விட்டார்.
340 கிலோ புகையிைல..
இதையடுத்து மற்றொருவரை பிடித்ததுடன் கொண்டு வந்த மூடைகளை சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் அருகே சவுந்திரலிங்கபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பதும், கொய்யாபழ வியாபாரியான இவர் தற்போது பணகுடியில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும், அவர் வீட்டில் பதிக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்து மொத்தம் 340 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதைதொடர்ந்து போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.