கிருஷ்ணகிரியில் சாலையோரம் முதியவர் பிணம்

கிருஷ்ணகிரியில் சாலையோரம் முதியவர் பிணம் கிடந்தது.

Update: 2022-03-20 17:47 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து அகசிப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்