ஊத்தங்கரை பேரூராட்சியில் அத்திக்குட்டை ஏரி தூர்வார பூமி பூஜை
ஊத்தங்கரை பேரூராட்சியில் அத்திக்குட்டை ஏரி தூர்வார பூமி பூஜை நடந்தது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட அத்திக்குட்டை ஏரி தூர்வாரி கரையை வலுப்படுத்த பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அமானுல்லா கலந்துகொண்டு பூமி பூஜை செய்து புதிய பணிகளை ெதாடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணை தலைவர் கலைமகள், கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர் சின்னத்தம்பி உள்பட பலர் உடன் இருந்தனர்.