வேப்பனப்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

வேப்பனப்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-03-20 17:46 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகைநத்தம் செல்லும் கிராம சாலையில் நேற்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையில் குறுக்கே படுத்து இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். பின்னர் வாகன ஓட்டிகள் மலைப்பாம்பை பிடித்து கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். மலைப்பாம்பு சாலையில் குறுக்கே படுத்து இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்