கீரனூரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-20 17:46 GMT
கீரனூர்:
கீரனூர் வணிகர் சங்கம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பார்த்திபன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 5-ந்தேதி திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கீரனூர் வணிகர் சங்கத் தலைவர் வீராச்சாமி, துணை தலைவர் பழனியப்பன், செயலாளர் சேக்காதர் இப்ராகிம், பொருளாளர் முருகேசன் உள்பட சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முடிவில் அபுசாலிக் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்