புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயரை எதிர்த்து போராட்டம்
விருத்தாசலத்தில் புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயரை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் சுல்தான் பேட்டை பேராயர் பீட்டர் அபீர் பொறுப்பு பேராயராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலம் மீரட் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், புதுவை, கடலூர் மறை மாவட்டத்தின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடலூர், புதுவை பகுதியில் 75 சதவீதம் ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் உள்ளதால், அந்த சமூகத்தை சேர்ந்த பேராயரை நியமிக்க கோரி, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில், ஆதிதிராவிட கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் கருப்பு கொடி கட்டி, பேராயர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.