அன்னவாசல்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அன்னவாசலில் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மத்திய அரசு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜமாத்தலைவர் முகமதுயூனூஸ், கம்யூனிஸ்டு ஒன்றிய பொருளாளர் மீராமைதீன், முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அசரப்அலி, த.மு.மு.க. தலைவர் புரோஸ்கான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முகமதுஅலிஜின்னா, தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி சரீப், அக்பர்அலி, ஈஸ்வரன், ராஜேஸ்வரி, காவுநசீர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடை அணியும் உரிமையை நீதிமன்றங்கள் தடுக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.