மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு சிறுவன் உள்பட 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்து சென்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்தனர்.

Update: 2022-03-20 17:20 GMT
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் மனைவி கனகவள்ளி (வயது 25). இவர் தனது ஸ்கூட்டரில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கனகவள்ளி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். குளவாய்பட்டி அருகே சென்ற போது மர்மநபர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வயலுக்குள் இறங்கி ஓட்டினர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மர்மநபர்கள் 2 பேரை விரட்டி பிடித்து வல்லத்திராக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் நகையை பறித்து சென்றது ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையை சேர்ந்த அப்துல் ரகுமான் (32), அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, 3 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்