சாத்தான்குளத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் சண்முகநகரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் முருகன் (வயது 65). இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் மகேஷ் (34), வெள்ளூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சேது மகன் ராமச்சந்திரன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து முருகன் வீட்டில் திருடியது தெரியவந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து மகேஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.