ஆனைமலை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
ஆனைமலை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
பொள்ளாச்சி
ஆனைமலை அடுத்த ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள புளியங்கண்டி வாய்க்கால் மேடு அருகே மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய படி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ஆழியார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க இருந்த ஆணின் உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூக்கில் தொங்கியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.