ஆறுமுகநேரியில் வீட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

வீட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துள்ளார்

Update: 2022-03-20 17:06 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பேச்சிமுத்து (வயது 35). இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவனும், மனைவியும் கூலி வேலை செய்து வருகின்றனர். பேச்சிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் தன் மனைவியிடம் சண்டையிட்டு குடிக்க பணம் வாங்கினார். பின்னர் மது குடித்துள்ளார்.
மனைவி காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் மனைவியிடம் தனக்கு குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு சண்டை போட்டார். அதற்கு அவர்  என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்தநிலையில் பேச்சிமுத்து வீட்டின் முன்பு போடப்பட்டுள்ள பந்தல் பனமரக்கட்டையில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருவர், பேச்சியம்மாளுக்கு தகவல் கூறினார். பின்னர் பேச்சுமுத்துவை கீழே இறக்கி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலொற்பவம் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்