தொப்பூர் அருகே அரசு பஸ் டயர்கள் பஞ்சரானதால் பயணிகள் அவதி
தொப்பூர் அருகே அரசு பஸ் டயர்கள் பஞ்சரானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
நல்லம்பள்ளி:
ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக வந்து கொண்டு இருந்தது. அப்போது தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே வந்த போது பஸ்சின் பின்பக்க டயர்கள் திடீரென வெடித்து பஞ்சரானது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதன்பின்னர் டயர்கள் மாற்றப்பட்டு பயணிகளுடன் பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது.