கடலூர் முதுநகரில் சிறுமி கடத்தல் கொத்தனாருக்கு வலைவீச்சு
கடலூர் முதுநகரில் சிறுமி கடத்தல் கொத்தனாருக்கு வலைவீச்சு
கடலூர் முதுநகர்,
புதுச்சேரி, மூர்த்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் சுரேஷ்(வயது 25). கொத்தனாரான இவர் கடலூர் முதுநகரை அடுத்த வசந்தராயன்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சுரேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த தனது மகளை சுரேஷ் கடத்திச் சென்று விட்டதாக சிறுமியின் தாய் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற கொத்தனாரை வலைவீசி தேடி வருகின்றனர்.