சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தியாகராஜபுரம் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 42), மொட்டையம்மாள் (58) ஆகியோர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.