ஓ.ராஜபாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

ஓ.ராஜபாளையம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

Update: 2022-03-20 16:08 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஓ.ராஜபாளையம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி ஓ.ராஜபாளையம் ஊராட்சி குட்டிமேய்க்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் மேற்கூரையில் கூரை அமைத்தல், சாய்வு தளம் அமைத்தல், பொருட்கள் வைக்கும் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். 
ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஆகியவற்றை அரைத்து தூளாக்கும் எந்திரம் நிறுவும் பணிகளை பார்வையிட்டதோடு, அங்கன்வாடி குழந்தைகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகள் வரும் தூய்மை பணியாளர்களின் சுகாதார பணிகள் குறித்து கலந்துரையாடினார். 
ஒக்கிலிபட்டியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மழைநீரை உறிஞ்சும் வகையிலான பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ஆழ்துளை கிணறு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் அமல்ராஜ், சாந்தா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்