கடலூர் துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி கடலூர் துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Update: 2022-03-20 15:59 GMT
கடலூர் முதுநகர்

 வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் இது நேற்று தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு கிழக்கே 1500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். கடந்த 130 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் வங்க கடலில் புயல் உருவாகி இருப்பது  2-வது முறை என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்