டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-03-20 15:44 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் வீரா(வயது 19). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஒரு டிராக்டரில் மண் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சவேரியார்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்