நாமக்கல்லில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
நாமக்கல்லில் பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர்கள் சதீஷ்குமார், கயல்விழி ஆகியோர் வரவேற்று பேசினர்.
கூட்டத்தில் 2017-ம் ஆண்டு போட்டி தேர்வின் மூலம் பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட ஆய்வக உதவியாளர்களுக்கு பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் பதவி உயர்வு ஏதும் வரையறுக்கப்படாததால் அதே ஊதிய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு முறையான பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் கல்வித்தகுதி இருப்பின் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக 2 சதவீதம் பணி மாறுதல் வாய்ப்பும் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்களுக்கு இணையான ஊதியத்தில் பணிபுரியும் பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு முறையான பதவி உயர்வோ, கல்வித்தகுதி இருந்தும் பட்டதாரி, முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் பெறும் வாய்ப்போ இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.