மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மார்த்தாண்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-20 15:40 GMT
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
மார்த்தாண்டம் கீழ்பம்மம் பொற்றவிளையை சேர்ந்தவர் சங்கர் (வயது 39), தொழிலாளி. இவருக்கு கவிதா (34) என்ற மனைவியும்,  ஒரு மகளும் உண்டு.
இவர்களது வீட்டு பக்கத்தில் ஒரு பப்பாளி மரம் உள்ளது. அந்த மரத்தை வெட்டி அகற்றுவதற்காக நேற்று காலை 7 மணியளவில் சங்கர் அதை வெட்டினார். பின்னர், அந்த மரத்தை வீட்டின் பின்புறம் கொண்டு போடுவதற்காக சங்கர் தோளில் சுமந்து சென்றார்.
 மின்சாரம் தாக்கியது
அப்போது, பப்பாளி மரம் அந்த வழியாக சென்ற மின்கம்பியில் உரசியது. இதில், கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கம் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சங்கரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்