அந்தேரி அருகே மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் அடித்துக்கொலை 8 பேர் கும்பல் கைது
அந்தேரி அருகே மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
அந்தேரி அருகே மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மது வாங்க பணம்...
மும்பை அந்தேரி மேற்கு செவன் பங்களா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது25). இவர் சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி சிங் உள்பட சிலர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மது வாங்க பணம் தருமாறு அவரிடம் கேட்டு உள்ளார். இதற்கு சூரஜ் பணம் கொடுக்க மறுத்தார்.
இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவி சிங் உள்பட அவரது கூட்டாளிகள் சேர்ந்து சூரஜை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில், படுகாயமடைந்த சூரஜ் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
8 பேர் கைது
இது பற்றி தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் அங்கு சென்று சூரஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ரவிசிங் உள்பட அவரது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.