மராட்டியத்தின் வளர்ச்சியை விரும்பும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர வேண்டும் மத்திய மந்திரி பேச்சு
மராட்டியத்தின் வளர்ச்சியை விரும்பும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர வேண்டும் என மத்திய மந்திரி பாகவத் காரட் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் வளர்ச்சியை விரும்பும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர வேண்டும் என மத்திய மந்திரி பாகவத் காரட் கூறியுள்ளார்.
பா.ஜனதாவில் சேர வேண்டும்
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, சிவசேனா பா.ஜனதா உடனான கூட்டணியை முறித்து கொண்டதை அடுத்து, இந்த புதிய கூட்டணி உருவானது.
இந்தநிலையில் மராட்டியத்தின் வளர்ச்சியை விரும்பும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக பா.ஜனதாவில் சேர வேண்டும் என மத்திய மந்திரி பாகவத் காரட் கூறியுள்ளார்.
ஊழல் மந்திரிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாவிகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த பல மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுபோன்ற ஒரு நிலையில் 3 கட்சிகள் அடங்கிய அரசால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. எனவே மராட்டியத்திற்கு பா.ஜனதா ஆட்சி தேவைப்படுகிறது.
எனவே உண்மையில் வளர்ச்சியை விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் கண்டிப்பாக சேர வேண்டும்." என்றார்.