தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதியது
சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதியது;
செங்கம்
செங்கம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களாக சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையும் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை செங்கம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.
சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைப்பது, சாலை போடுவது குறித்தும் எச்சரிக்கை பலகை வைத்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.