ரஷியா உக்ரைன் போரை நிறுத்தக்கோரி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம்

ரஷியா உக்ரைன் போரை நிறுத்தக்கோரி கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் சென்றனர்.

Update: 2022-03-20 14:36 GMT
குன்னூர்

ரஷியா-உக்ரைன் இடையே போர் நிலவி வருவதால், அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் உயிரிழந்து வருகிறார்கள். மேலும் இந்த போரினால் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகிறார்கள். 

இந்த போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த போரை நிறுத்தக்கோரி குன்னூர் ஆழ்வார்பேட்டை யில் உள்ள புனித ஜோசப் ஆலய பங்கு மக்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

 அங்குள்ள சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

அவர்கள் தங்கள் கையில் உடனடியாக போரை நிறுத்து, வெறுப்பை விலக்கு, அன்பை விதை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலம் பெட்போர்டு சர்ச்சில் முடிந்தது. 

மேலும் செய்திகள்