கோத்தகிரி அருகே சேலக்கொரையில் உழவர் விழா
கோத்தகிரி அருகே சேலக்கொரையில் உழவர் விழா நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் சேலக்கொரை கிராமத்தில் உழவர் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார். வெலிங்டன் கோதுமை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் நஞ்சுண்டன், பெர்லின் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதகை மண் ஆய்வுகூட தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தி பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கோதுமை ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் நஞ்சுண்டன், நூற்புழுவியல் பேராசிரியர் பெர்லின், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜா, துணை தோட்டக் கலை அலுவலர் சந்திரன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் வரவேற்றார். முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்.