வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Update: 2022-03-20 14:31 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் வெடியரசம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் பொக்லைன் எந்திர வாகன உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, தனது கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் கடந்த 9-ந் தேதி பெட்ரோல் ஊற்றி தனது உடலில் தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தாய் பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்