நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்களை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்- மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ்

மத்திய மந்திரி நாராயண் ரானேவின் பங்களாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-03-20 14:29 GMT
படம்
மும்பை, 
மத்திய மந்திரி நாராயண் ரானேவின் பங்களாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 15 நாட்களுக்குள் இடிக்க மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாராயண் ரானே பங்களா
மும்பை ஜூகு கடற்கரையோரம் மத்திய மந்திரி நாராயண் ரானேவுக்கு சொந்தமான 'ஆதிஷ்' என்ற பங்களா உள்ளது. இந்த வீட்டில் கடந்த மாதம் 21-ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு அவர்கள் நாராயண் ரானே பங்களாவில் விதிகளை மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறினர். மேலும் இது தொடர்பாக நாராயண் ரானே தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
மாநகராட்சியின் நோட்டீசுக்கு கடந்த 11-ந் தேதி நாராயண் ரானே தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருந்தது. அதில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு இருந்தது.
மீண்டும் நோட்டீஸ்
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி மீண்டும் நாராயண் ரானே தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், "உங்கள் கட்டிடத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். 
தவறினால் மாநகராட்சி சட்டவிரோத கட்டுமான பணிகளை அகற்றும். மேலும் அதற்கு ஆகும் செலவும் உங்களிடம் வசூலிக்கப்படும்." என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்