தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சாயக்காரத்தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்மேகம் (வயது52). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.