கரடிகுப்பம் கிராமத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கரடிகுப்பம் கிராமத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

Update: 2022-03-20 13:14 GMT
சோளிங்கர்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காகவும், நினைவூட்டலை மேம்படுத்தவும் ஓராசிரியர் பள்ளி சார்பில் சோளிங்கர், அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த தலங்கை, வேலம், ஒழுகூர், கரடிகுப்பம் உள்ளிட்ட 34 பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி கரடிகுப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தனர். 

ஓராசிரியர் பள்ளி கவுரவ செயலாளர் கிருஷ்ணமாச்சாரியார், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் அகிலா சீனிவான் மற்றும்  ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் குமரேசன், செய்தி தொடர்பாளர் சபரி முத்து ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்