ஆரணி
ஆரணி நகரில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.
5.30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
19 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.