இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்;
தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் முஜிபுர்ரகுமான் கலந்து கொண்டு பேசினார்.
ஹிஜாப்புக்கு தடை என்பதை கண்டித்து அதிராம்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்து பேசிய மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி மீது வழக்குப்பதிவு செய்து இரவுவோடு இரவாக போலீசார் கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது, துணைத் தலைவர் வல்லம் ஜாபர், துணைச் செயலாளர்கள் ஆவணம் ரியாஸ், அஷ்ரப்அலி, வல்லம் அப்துல்லா உள்பட பெண்கள், ஆண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.