பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனை 4-வது வார்டு தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட் (வயது 42). பெயிண்டரான இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். மேலும் அவரது மகன், மகள் ஆகியோர் தாயுடன் வசித்து வருகின்றனர். ரூஸ்வெல்ட்டுக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரூஸ்வெல்ட் வழக்கம்போல் வீட்டில் உள்ள தனது படுக்கை அறையில் தூங்க சென்றார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ரூஸ்வெல்டின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது 3-வது அண்ணன் சிவக்குமார் மூர்த்தி ஜன்னல் வழியாக அறையில் எட்டி பார்த்தபோது உள்ளே மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் ரூஸ்வெல்ட் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தாழ்ப்பாளை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்று ரூஸ்வெல்ட்டின் உடலை கீழே இறக்கினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் ரூஸ்வெல்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.