கிராம ஊராட்சி தலைவர்களுடனான முதல்நிலை ஆய்வுக்கூட்டம்

கிராம ஊராட்சி தலைவர்களுடனான முதல்நிலை ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-03-19 21:13 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொது திறவிட பகுதிகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து 121 கிராம ஊராட்சி தலைவர்களுடனான முதல்நிலை ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசினார். அப்போது, ஒரு மனைப்பிரிவில் அமையப்பெற்றுள்ள பொது திறவிடப் பகுதி மற்றும் சாலைக்கான இடத்தினை பாதுகாப்பது தொடர்பாக பொது திறவிடப் பகுதி ஒன்றிய அளவில் பதிவேடு பராமரித்தல், பொது திறவிடப் பகுதிகளுக்கான ஆவணங்கள் பெறுதல், விடுபட்ட ஆவணங்களை சார்பதிவாளரிடம் பெறுதல், தான பத்திரம் விவரத்தை பதிவேட்டில் பராமரித்தல், பட்டா மாற்றம் மற்றும் பணிகளை முடிக்க வேண்டிய கால அட்டவணை ஆகிய தலைப்பில் விரிவான முறையில் நிலையான அறிவுரைகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கினார்.இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்