மகா காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
மகா காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.;
தாமரைக்குளம்:
அரியலூரில் கபிரியேல் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 7-ம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் பவுர்ணமி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பூக்களை எடுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் மகா காளியம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.